எங்கெங்கு நிறுத்தலாம்

தோடர்வெளியீடு: 18-01-2017 08:23 pm

நிலய்க்கல்

5800

&

சக்குபாலம்-1

100

சக்குபாலம்- 2

50

திரிவேணி

400

ஹில் டோப்

800

வரிசை நிலவாரம்

2 Hours

If you start from Pampa now you are likely to reach Pathinettam Padi at 02:31 pm. Queue tail is at Pathinettam Padi

வேண்டுகோள்கள்

செய்ய வேண்டியவை

மரபாகப் பின்பற்றப்படும் பாதையை – மரக்கூட்டம், சரங்குத்தி, நடைப்பந்தல் வழியாக சந்நிதானத்தை அடையவும்.

வரிசையில் நின்று பதினெட்டாம் படிக்கருகில் செல்லுங்கள்.

நடைப்பந்தல் மேம்பாலம் வழியாக, திரும்பிச் செல்லுங்கள்.

கழிப்பறைகளை மட்டுமே, இயற்கையின் அழைப்புகளுக்குப் பயன்படுத்துங்கள்.

கூட்ட நிலவரத்தைத் தெரிந்துகொண்ட பின்னர் பம்பைக்குப் புறப்படுங்கள்.

டோலியில் செல்பவர்கள், தேவஸ்தான அலுவலகத்தில் பணத்தைச் செலுத்தி, ரசீதை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

பாதுகாப்புச் சோதனை இடங்களில் சோதனைக்கு உட்படுங்கள் .

எந்த உதவிக்கும் காவல்துறையை நாடுங்கள்.

சந்தேகமான நபரைக் குறித்து, காவல்துறைக்குத் தகவல் கூறுங்கள்.

அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலிருந்து மட்டுமே பொருட்களை வாங்குங்கள்.

பம்பை, சந்நிதானம் ஆகிய இடங்களையும் இவற்றை இணைக்கும் சாலைகளையும் துப்புரவாக வைத்துக் கொள்ள உதவுங்கள்.

வாகனங்களை நிறுத்துமிடத்தில் மட்டுமே நிறுத்துங்கள்.

செய்யக் கூடாதவை

பம்பையிலும் சந்நிதானத்திலும் இவற்றின் பாதையிலும் வரும் போது புகை பிடிக்காதீர்கள்.

வரிசையை மீறாதீர்கள்.

வரிசையில் நிற்கும் போது தள்ளாதீர்கள்.

ஆயுதங்களையோ வெடி மருந்துகளையோ கொண்டு வராதீர்கள்.

அங்கீகரிக்கப்படாத வியாபாரிகளிடமிருந்து பொருட்களை வாங்காதீர்கள்.

கழிப்பறைகளுக்கு வெளியே அசுத்தம் செய்யாதீர்கள்.

எந்தச் சேவைக்கும் அதிகமாகப் பணம் கொடுக்க வேண்டாம்.

எந்த உதவிக்கும் காவல் துறையை நாட தயங்க வேண்டாம்.

தேவையற்ற பொருட்களைக் குப்பைத் தொட்டிகளில் அல்லாது வேறெங்கும் போட வேண்டாம்.

பதினெட்டாம் படியின் இருபக்கங்களில் அல்லாமல் வேறெங்கும் தேங்காய் உடைக்க வேண்டாம்.

பதினெட்டாம் படி ஏறும் போது மண்டியிட வேண்டாம்.

திரும்பிப் போகும் போது நடைப்பந்தல் மேம்பாலம் தவிர வேறெந்த வழியையும் பயன்படுத்த வேண்டாம்.

மேல் திருமுற்றத்திலோ தந்திரி நடையிலோ ஓய்வெடுக்காதீர்கள்.

நடைப்பந்தலின் அருகிலுள்ள கூடார தங்குமிடத்திற்கும் கீழ் திருமுற்றத்திற்கும் செல்ல நடைப்பாதையைப் பயன்படுத்தாதீர்கள்.

பாதுகாப்பு

ஆயுதங்களைக் கொண்டு வரக்கூடாது.

எரிவாயு, அடுப்பு ஆகியனவற்றை சந்நிதானத்தில் பயன்படுத்தக் கூடாது.

தீ மூட்டினால் பயன் நிறைவேறியதும் அணைக்கப்பட வேண்டும்.

பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன்னால் உங்களையும் உங்கள் பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்.

காணாமல் போவதும் மீட்பதும்

Kerala Police offers multiple services to the devotees to ensure a safe and peaceful darshan and pilgrimage during the season.

மக்கள்

காணாமல் போகும், திரும்பக் கிடைக்கும் நபர்களைப் பற்றிய தகவல்களை பணியில் இருக்கும் எந்த ஒரு காவல் அதிகாரியிடமோ காவல் உதவி மையத்திலோ காவல் கண்காணிப்பு இடங்களிலோ காவல் நிலையத்திலோ தெரிவிக்கலாம். காணாமல் போனவருக்குத் தெரிந்த மொழியில் அறிவிப்பு செய்யப்பட்டு, அந்த பக்தர்/உறவினர் மீட்டுக் கொடுக்கப்படுவார்.

Placeholder

பொருட்கள்

தொலைந்து போன/கண்டெடுக்கப்பட்ட பொருட்களைப் பற்றிய செய்திகளை எந்த ஒரு காவல் அதிகாரியிடமோ காவல் உதவி மையத்திலோ காவல் கண்காணிப்பு இடங்களிலோ காவல் நிலையத்திலோ ஒப்படைக்கலாம்.

எப்படி அடைவது

பக்தர்களின் வசதிக்காக, கேரள அரசின் போக்குவரத்துக் கழகம் கோவை, பழனி, தென்காசி ஆகிய இடங்களுக்கு பம்பையிலிருந்து பேருந்துகள் புறப்படுகின்றன.

தமிழக, கர்நாடக அரசின் போக்கு வரத்துப் பேருந்துகளும் பம்பைக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பம்பைக்கும் நிலய்க்கலுக்கும் இடையே தொடர் வண்டிகள் ஓடுகின்றன.

View Road Maps of Kerala
பக்தர்கள் மேற்கூறிய இரயில் நிலையங்களை வந்தடைந்து அங்கிருந்து பம்பைக்குப் பேருந்தில் வரலாம்.
அருகிலிருக்கும் இரயில் நிலையங்கள்:
கோட்டயம் (தூரம் கோட்டம் – பம்பை) 119 கி.மீ
செங்கன்னூர் (தூரம் – 93 கி.மீ)
(சபரிமலைக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் குறித்த தகவல்கள்)
அருகிலிருக்கும் விமான நிலையம் – திருவனந்தபுரம், நெடும்பாசேரி, கரிப்பூர்
 • தடம் தூரம்
  எருமேலி – பம்பா 45 km
  கோட்டயம் – எருமேலி (காஞ்சிரப்பள்ளி வழி) 55 km
  கோட்டயம் – எருமேலி (மணிமலை வழி) 54 km
  கோட்டயம் – பம்பை (மணிமலை வழி) 116km
  கோட்டயம் – பம்பை (திருவல்லா – கோழஞ்சேரி வடசேரிக்கரை வழி) 119 km
  கோட்டயம் – பம்பை (திருவல்லா வழி) 123 km
 • தடம் தூரம்
  செங்கனூர் – பம்பை 93 Km
  எர்ணாகுளம் – பம்பை (கோட்டயம் வழி) 200 km
  ஆலப்புழை – பம்பை (ஏ.சி பாதை வழி) 137 km
  புனலூர் – பம்பை 101 km
  பத்தனம்திட்டா – பம்பை 65 km
  திருவனந்தபுரம் – பம்பை 180 km
  எர்ணாகுளம் – எருமேலி (வைக்கம், பாலா, பொன்குன்னம் வழி) 121km

செய்தி

அவசரத் தேவை
தொடர்பு நிலையம்

காவல்துறை கண்ட்ரோல் ரூம், பம்பா
04735 203386

காவல்துறை கண்ட்ரோல் ரூம், சன்னிதானம்
04735 202016

காவல் நிலையம், பம்பா
04735 203412

காவல் நிலையம், சன்னிதானம்
04735 202014

ஹிவே உதவி, கேரளா காவல்துறை
9846 100 100

ரயில் உதவி, கேரளா காவல்துறை
9846 200 100

நெடுஞ்சாலை காவல்துறை, பத்தனம்திட்ட
04735 202101

குறுஞ்செய்தி நிலையம், கேரளா காவல்துறை
9497 900 000